பாஜக எம்பியும் ராஜ்வன்ஷி சமூகத்தை சேர்ந்த பிரமுகரான அனந்த் மகாராஜ் என்பவர் இன்று மம்தாவை சந்தித்திருப்பதாகவும், அவருடன் சேர்ந்து பாஜக எம்.பி.க்கள் மூன்று பேர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் மூன்று எம்பிக்கள் கட்சி மாறினால் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் என கூறப்படுகிறது. மேலும் ஆட்சி நிலையாக இருக்க வேண்டுமானால் மக்களவை சபாநாயகர் பதவியை தங்கள் வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.