நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனி பெரும்பான்மை பெறாமல் கூட்டணி கட்சிகளின் ஆதரவில் தான் ஆட்சி அமைத்துள்ளது என்றும் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் பிரதமர் பதவிக்கு வந்துள்ளதை அடுத்து மம்தா பானர்ஜி அதிருப்தி அடைந்து மோடி பதவியேற்கும் நேரத்தில் தனது அலுவலகத்தில் உள்ள விளக்குகளை அனைத்து விட்டு இருளில் உட்கார்ந்து இருந்ததாக கூறப்படுகிறது
கிட்டதட்ட வாரணாசியை இழந்து விட்டார்கள் என்றும் அயோத்தியிலும் தோற்றுவிட்டார்கள் என்றும் ஒட்டுமொத்தமாக பிரச்சாரம் செய்தும் பெரும்பான்மை பெறக்கூட முடியவில்லை என்றும் எனவே புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மம்தா பானர்ஜி இருளில் உட்கார்ந்திருந்ததாக அவரது கட்சியை சேர்ந்த ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.