மோடியின் தியானத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பக் கூடாது..! மீறினால் புகார் அளிப்பேன் என மம்தா எச்சரிக்கை..!

Senthil Velan

வியாழன், 30 மே 2024 (13:14 IST)
தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடியின் தியானத்தைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால், தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்பேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.
 
மக்களவைத் தேர்தல் இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், கன்னியாகுமரியில் தியானம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகிறார். பிரதமரின் வருகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கன்னியாகுமரியில் மோடி தியானம் செய்ய உள்ளதை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தியானம் என்பது யார் வேண்டுமானாலும் செய்யலாம் இன்றும்  யாராவது தியானம் செய்யும் போது கேமராவை எடுத்துச் செல்வார்களா? விதவிதமாக போட்டோ எடுப்பார்களா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
 
மக்களவைத் தேர்தல் முடிவு வெளியாவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை, தியானம் என்ற பெயரில், குளிர்சாதனை அறையில் சென்று உட்காருகிறார் என்று அவர் விமர்சித்துள்ளார். மோடியின் இந்த செயல் குறித்து எந்தக் கட்சியும் வாய் திறக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய மம்தா, மோடியின் தியானத்தைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால், அது தேர்தல் நடத்தை விதி மீறல் என்று கூறியுள்ளார்.

ALSO READ: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா.? டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல்..!

மோடியின் தியானத்தை ஒளிபரப்பு செய்தால் தேர்தல் ஆணையத்திடம் புகார் என்று மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்