கேரளாவில் படித்தவர்கள் அதிகமாக இருப்பதால் எங்களால் வளரமுடியவில்லை – பாஜக எம் எல் ஏ பேச்சு!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (12:04 IST)
கேரளாவில் பாஜகவால் ஏன் பெரியக் கட்சியாக வளர முடியவில்லை என அக்கட்சி எம் எல் ஏ ராஜகோபால் கூறியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியாவை ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக, வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் ஆளும் கட்சியாக உள்ளது. ஆனால் தென்னிந்தியாவில் பெரிதாக அந்த கட்சியால் வளர முடியவில்லை. அதிலும் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் அவர்களுக்குப் பெரிய அளவில் எதிர்ப்பு உள்ளது.

இந்நிலையில் பாஜக எம் எல் ஏ வான ராஜகோபால் ‘கேரளாவில் 90 சதவீதம் பேர் படித்தவர்களாக உள்ளனர். படித்த மக்களின் பண்புகளான சிந்தித்தல் மற்றும் விவாதித்தலில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். இதனால் பாஜகவால் வளர  முடியவில்லை’ எனக் கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்