பொது இடத்தில் சிறுநீர் கழித்த பாஜக அமைச்சர்

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2017 (13:18 IST)
பாஜக அமைச்சர் ராம் ஷிண்டே பொது இடத்தில் சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


 

 
மகாராஷ்டிரா மாநில நீர் மேலாண்மை துறை அமைச்சர் ராம் ஷிண்டே சாலையில் சிறுநீர் கழிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதனால் பெரும் சர்ச்சையும் எழுந்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தை முன்னிறுத்தி வரும் பாஜவைச் சேர்ந்த அமைச்சரே பொது இடத்தில் சிறுநீர் கழித்ததால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. 
 
இதுகுறித்து விளக்கம் அளித்த ராம் ஷிண்டே கூறியதாவது:-
 
ஜலியுக்தா சிவார் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக நான் கடந்த ஒருமாதமாக தொடர்ந்து பயணம் செய்து வருகிறேன். தொடர்ந்து அதிக வெப்பநிலையில் பயணம் மேற்கொண்டதில் எனக்கு உடல்நிலை பாதிப்படைந்து காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது. பயணத்தின் பொது கழிவறை இல்லாத காரணத்தினால் பொது வெளியில் சிறுநீர் கழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்