தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் தலைமுடி, அவரது உருவத்தை வைத்து சமூக வலைதளங்களில் சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்கின்றனர். ஒரு பெண் அரசியலில் தைரியமாக செயல்படுகிறார் என்று கூட பார்க்காமல், ஒரு பெண் அரசியல்வாதியின் உருவத்தை வைத்து மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்கின்றனர் சிலர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆரோக்கியமான சமூக பார்வைக்கு இது வழி வகுக்காது.
இந்நிலையில் தன்னை கேலி செய்பவர்கள் பற்றி கூறியுள்ள தமிழிசை, என் உருவத்தை, உயரத்தை, தலைமுடியை, நிறத்தை கேலி செய்கிறார்கள். நான் அவர்களைக் கண்டு அச்சப்படுவதற்குப் பதிலாக, சிரித்துக் கொள்கிறேன். அவர்கள் விக்கிப்பீடியா இணையப்பக்கத்தில் கூட தமிழிசை என்ற என் பெயரை டுமிலிசை என மாற்றினார்கள்.