ஒடிசா பா.ஜ.க. மூத்த தலைவர் பிதாபாஷ் பாண்டா சுட்டுக் கொலை! காங்கிரஸ் கடும் கண்டனம்..!

Mahendran

செவ்வாய், 7 அக்டோபர் 2025 (10:10 IST)
ஒடிசாவில் பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், பிரபல வழக்கறிஞருமான பிதாபாஷ் பாண்டா அவரது பிரம்மநகர் இல்லத்திற்கு வெளியே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 
நேற்று இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பாண்டாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தார். பிதாபாஷ் பாண்டா ஒடிசா மாநில பார் கவுன்சிலில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
 
இந்த கொலை குறித்துச் சிறப்புப் படை அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது; சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
 
பா.ஜ.க. தலைவரின் கொலைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பக்த சரண் தாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது அவர் குற்றம் சாட்டியுள்ளார். 
 
சொந்தக் கட்சி தலைவரை கூட பாதுகாக்க தவறியது, மாநிலத்தின் மோசமான நிலையை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்