ஏஆர் ரஹ்மான் இசையில் மகேஷ் முத்துச்செல்வன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வருகிறது. பேன் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஒரு பேண்டஸி திரைப்படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பே முடிந்தும் ரிலீஸ் பற்றி எந்த தகவலும் இல்லை.
படத்தைப் பார்த்த தயாரிப்பாளர்களுக்குத் திருப்தி இல்லாததால் மீண்டும் சில நாட்கள் ஷூட் செய்யவுள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில் இன்று இந்த படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலான அப்டி அப்டி ரிலீஸாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.