பசுமைப் பட்டாசுகளுக்கு அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு! டெல்லி முதல்வர் முடிவு..!

Mahendran

செவ்வாய், 7 அக்டோபர் 2025 (10:15 IST)
இந்தியப் பண்பாட்டில் தீபாவளி மிக முக்கியமானது என்று குறிப்பிட்ட டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, வரவிருக்கும் பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் பசுமை பட்டாசுகளை பயன்படுத்த அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு மனு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
 
கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு, சான்றளிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை பயன்படுத்த அனுமதி கேட்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதில் அரசு கடமைப்பட்டுள்ளதாகவும் வலியுறுத்தினார்.
 
முன்னதாக, உச்ச நீதிமன்றம் டெல்லி-என்சிஆர் பகுதியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்திருந்தது. இருப்பினும், நீரி மற்றும் பெசோ ஆகிய அமைப்புகளால் சான்றளிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை, நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் தடை செய்யப்பட்ட பகுதிகளில் விற்க மாட்டோம் என்ற உறுதிமொழியுடன் தயாரிக்கலாம் என நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி அளித்திருந்தது.
 
தற்போது, பசுமை பட்டாசு பயன்பாட்டுக்கு அனுமதி கோரி டெல்லி அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அக்டோபர் 8-ஆம் தேதி இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்