அரசுகளை கொலை செய்யும் சீரியல் கில்லர்: பாஜக குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (18:24 IST)
அரசுகளை கொலை செய்யும் சீரியல் கில்லர் என பாஜக குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அந்த ஆட்சியை கவிழ்க்க அக்கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
 இந்த நிலையில் மாநில அரசுகளை கொலை செய்யும் சீரியல் கில்லர் என டெல்லி அரசு கவிழ்ப்பு முயற்சி குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
 
 பெட்ரோல் டீசல் உயர்வு ஆகியவை மூலம் கிடைக்கும் பணத்தினால் மற்ற கட்சிகளை பாஜக விலைக்கு வாங்குகிறது என்றும் பாஜக இதுவரை 6,300 கோடி செலவில் 275 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி உள்ளது என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்