சிவசேனாவை காப்பியடித்த பாஜக: சிவபோஜனுக்கு எதிராக களம் காணும் தீனதயாள்

Webdunia
புதன், 12 பிப்ரவரி 2020 (15:32 IST)
சிவசேனாவின் சிவபோஜன் உணவுத்திட்டத்துக்கு எதிராக தீனதயாள் உணவு திட்டத்தை தொடங்கியுள்ளது பாஜக.

மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸின் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தலிபோது சிவசேனா மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதில் ஏழை எளிய மக்களுக்கு உணவளிக்கும் திட்டமும் ஒன்று. “சிவபோஜன்” என்ற பெயரில் 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை மகாராஷ்டிர அரசு தொடங்கியுள்ளது. அதன்படி 10 ரூபாய்க்கு 2 சப்பாத்தி, அரிசி சாதம், பருப்பு மற்றும் காய்கறி கூட்டு ஆகியவை வழங்கப்படுகின்றன. மகாராஷ்டிரா முழுவதும் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டத்தை அடியொற்றியதுபோல பாஜகவும் புதியதொரு உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

மறைந்த ஜனசங்க தலைவர் தீனதயாள் பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் படி 30 ரூபாய்க்கு, 3 சப்பாத்திகள், அரிசி சாதம், பொறியல் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. தற்போது பண்டர்பூர் விட்டல் கோவில் அருகே தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்த இருப்பதாக பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பாஜக தங்களது திட்டங்களை பார்த்து காப்பி அடிப்பதாக சிவசேனாவினர் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்