சமீபத்திய ரெய்டுகளால் விஜய்யின் அரசியல் பற்றிய பேச்சுகள் மீண்டும் துளிர்விட ஆரம்பித்துள்ளன. இதையடுத்து மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் சிலர் ஒட்டிய போஸ்டர் ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் விஜய் அருகே ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனும் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோரும் ‘ஆந்திராவை நாங்கள் காப்பாற்றி விட்டோம். லங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் . மக்கள் நலன் கருதி களமிறங்குங்கள்’ என்க் கூறுவது போல் அச்சடிக்கப்ப்ட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்துடன் ஆலோசனைப் பெற்று கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.