பாடப்புத்தகங்களில் வரலாற்றை திரித்த பா.ஜ.க:ராஜஸ்தான் அரசின் அதிரடி செயல்

Webdunia
திங்கள், 17 ஜூன் 2019 (10:53 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க., பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களில், வரலாற்றை திரித்து எழுதி இருக்கின்றனர் என்று ராஜஸ்தான் அரசு குற்றம் சாட்டி, அந்த வரலாற்றுத் தகவல்களை மாற்றி அமைத்திருக்கிறது.

பா.ஜ.க. ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தபோது, பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களில் வரலாற்று மோசடிகளை செய்துள்ளதாக கூறி, ராஜஸ்தானின் தற்போதைய காங்கிரஸ் முதல்வர் அசோக்கெலாட், அந்த போலி வரலாற்றுகளை அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார்.

பன்னிரண்டாம் வகுப்பு வரலாற்று புத்தகத்தில் விடுதலை போராட்டத்தில் சாவார்க்கரின் பங்கு அளப்பரியது என்றும், அவரின் வீர தீர செயல்களினால் அவருக்கு வீர் பட்டம் வழங்கப்பட்டது என்றும், ஒரு பொய்யான தகவல் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் விடுதலை போராட்ட காலகட்டங்களில் சாவார்க்கர் என்றொருவர் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி அந்தமான் சிறை சென்றார் எனவும், பின்பு கணக்கில் அடங்காத மன்னிப்பு கடிதங்களை எழுதி, அந்தமான் சிறையிலிருந்து வெளியே வந்து ஆங்கிலேயர்களுக்கு விஸ்வாசமாக நடந்துகொண்டார் என்பதே சாவார்க்கரின் உண்மை வரலாறு என்று ராஜஸ்தான் அரசு அந்த பாடப்புத்தகங்களில் மாற்றி அமைத்திருக்கிறது.

மேலும் அதில் மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவுக்கு உதவியதாகவும் ராஜஸ்தான் அரசு மாற்றி அமைத்திருக்கிறது.

பின்பு அதே பன்னிரண்டாம் வகுப்பு பாடப்புத்தகங்களில், மத்திய மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், பயங்கரவாத அமைப்புகளிடம் பணப்புழக்கம் குறைந்தது எனவும் குறிப்பிட்டிருந்ததையும் தற்போதைய ராஜஸ்தான் அரசு நீக்கியுள்ளது.

2014-ஆம் ஆண்டில் பா.ஜ.க. ஆட்சி அமைத்ததிலிருந்து, நாட்டில் பல இடங்களில் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதாகவும், இந்துத்துவா வலிந்து திணிக்கப்படுவதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன.

இதனை தொடர்ந்து தற்போது இந்த வரலாற்று மோசடி சம்பவம் பல சிறுபான்மையின அமைப்புகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்