பிட்காயின் வைத்திருந்தால் அபராதம்: விரைவில் மசோதா தாக்கல்!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (19:24 IST)
பிட்காயின் வைத்திருந்தால் அபராதம்: விரைவில் மசோதா தாக்கல்!
பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளை வைத்திருந்தால் அபராதம் என்ற மசோதா விரைவில் அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இந்தியா உட்பட பல நாடுகளில் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளை வாங்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பிட்காயின் பரிவர்த்தனை பயன்படுத்தும் தனிநபர்கள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா ஒன்றை விரைவில் நாடாளுமன்றக் கூட்டத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
பிட்காயின் உள்ளிட்ட கரன்சிகள் நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி கருதுகிறது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 70 லட்சம் பேர் 7 ஆயிரம் கோடி மதிப்பிலான பிட்காயின்களை வைத்திருப்பதாக ஒரு தகவல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்