ஒரு நிமிடத்தில் 1244 .. பிரியாணியுடன் புத்தாண்டை கொண்டாடிய இந்தியர்கள்..!

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2024 (11:34 IST)
2023 ஆம் ஆண்டு இறுதி நாளில் நேற்று ஒரே நாளில் ஒரு நிமிடத்திற்கு 1244 பிரியாணி நான் ஆர்டர் வந்ததாக ஸ்விக்கி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.
 
நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டது. நள்ளிரவு 12 மணி முதல்  பொதுமக்கள் புத்தாண்டை சிறப்பாக வரவேற்றனர். மேலும் நேற்று பெரும்பாலான மக்கள் ஹோட்டல்களில் பிரியாணியும், வீடுகளில் பிரியாணி ஆர்டர் செய்தும் சாப்பிட்டு மகிழ்ந்தனர்,

இந்த நிலையில் ஸ்விக்கி தனது சமூக வலைத்தளத்தில்  2023ஆம் ஆண்டு இறுதி நாளான நேற்று ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 1244 பிரியாணி ஆர்டர் பெற்றதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் பிரியாணி சாப்பிட்டு புத்தாண்டை கொண்டாடி உள்ளது தெரிய வந்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்