தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்ட்டாட்டங்கள்: ராஜ அலங்காரத்தில் வடபழனி முருகன்..!

திங்கள், 1 ஜனவரி 2024 (07:26 IST)
2024 ஆம் ஆண்டு இன்று பிறந்துள்ள  நிலையில் உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நள்ளிரவு 12 மணிக்கு பட்டாசு வெடித்தும் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தும் பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாடி வருகின்றனர். 
 
தமிழகத்திலும் நள்ளிரவு 12 மணி முதல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். குறிப்பாக அதிகாலை 4 மணி முதல் கோவில்கள் தேவாலயங்கள் உள்ளிட்டவற்றில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது என்பதும் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து புத்தாண்டு சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக சென்னை வடபழனி முருகன் கோவிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புத்தாண்டு பிறப்பை ஒட்டி வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜையை காண அதிகாலை முதலை நீண்ட வரிசைகள் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 
 
குறிப்பாக இன்று ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகன் காட்சியளித்து அருள்பாலிக்கும் உற்சவரராக உள்ளார் என்பதால் பக்தர்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்