திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடங்குவது எப்போது? முழு அட்டவணை வெளியீடு!

Mahendran

வெள்ளி, 10 அக்டோபர் 2025 (17:59 IST)
முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா, அக்டோபர் 22 அதிகாலை யாக பூஜையுடன் தொடங்குகிறது.
 
அக்டோபர் 22 அன்று அதிகாலை 1 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். அக்டோபர் 23 முதல் 26 வரை தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, யாக பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இந்த நாட்களில், மாலை 6 மணிக்குச் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கத் தேரில் எழுந்தருளி உலா வருவார்.
 
விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், அக்டோபர் 27 அன்று நடைபெறுகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மாலை 4 மணிக்குச் சுவாமி கடற்கரையில் எழுந்தருளி, சூரபத்மனைச் சம்ஹாரம் செய்யும் வைபவம் நடைபெறும்.
 
திருவிழாவின் 7-வது நாளான அக்டோபர் 28 அன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு ராஜ கோபுரம் அருகில் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற உள்ளது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்