நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, 1951 முதல் 2011 வரையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, முஸ்லிம் மக்கள்தொகை 24.6 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இந்துக்களின் மக்கள்தொகை 4.5 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த விகிதாச்சார மாற்றத்திற்கு காரணம், பிறப்புக்குறைவு அல்ல; மாறாக பிரிவினையை தொடர்ந்து இந்தியாவுக்குள் அந்நியர்களின் ஊடுருவலும் வெளிநாட்டிலிருந்து வந்த குடியேற்றமுமே காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.
அமித்ஷாவின் இந்த விமர்சனத்துக்கு பதிலளித்த காங்கிரஸ், மத்திய உள்துறை அமைச்சராக கடந்த 11 ஆண்டுகளாக பதவியில் இருக்கும் அவர், எல்லை பாதுகாப்பையும் ஊடுருவலை தடுக்கவும் என்ன நடவடிக்கை எடுத்தார் என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதனையடுத்து அமித்ஷா இந்த கருத்தை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.