இந்த நிலையில் இன்று காலை குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
குஜராத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையான தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளதால் இம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 154 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது என்பதும் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி உறுதியானதை தொடர்ந்து குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேல் டிசம்பர் 12 ஆம் தேதி பதவியேற்கிறார் என குஜராத் பாஜக மாநில தலைவர் சி.ஆர்.பட்டீல் அறிவித்துள்ளார். மேலும், பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.