குஜராத்தில் பாஜக ஆட்சி, இமாச்சல பிரதேசத்தில் இழுபறி: வாக்கு எண்ணிக்கை நிலவரம்

வியாழன், 8 டிசம்பர் 2022 (11:02 IST)
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் நடந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. 
 
இந்த நிலையில் இன்று காலை குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. 
 
இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் 34 தொகுதிகளிலும் பாஜக 31 தொகுதிகளிலும் மற்றவை 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. எனவே இம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பது யார் என்பது இழுபறியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் குஜராத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையான தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளதால் இம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 154 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது என்பதும் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்