மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

Siva

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2025 (17:09 IST)
பெங்களூரு மெட்ரோவில் சூட்கேஸ் எடுத்து சென்ற பயணி ஒருவரிடம் ரூ.30 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
பெங்களூருவை சேர்ந்த அவிநாஷ் சஞ்சல் என்பவர், தனது அனுபவத்தை 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்து, "பெங்களூரு மெட்ரோ ஏற்கனவே நாட்டின் மிக அதிக கட்டணம் கொண்ட ஒன்று. அதிலும் இதுபோல கூடுதல் கட்டணம் வசூலிப்பது பயணிகள் மீது தேவையற்ற சுமையை ஏற்றுகிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
இந்த பதிவு உடனடியாக வைரலானது. நூற்றுக்கணக்கான பயணிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். பலர் அவிநாஷின் ஆதங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும், சிலர் மெட்ரோ நிர்வாகத்தின் கொள்கைக்கு ஆதரவாக பேசினர்.
 
"முணுமுணுப்பதை நிறுத்துங்கள். உங்கள் பை ஸ்கேனரில் பொருந்தவில்லை என்றால், நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். நான் பலமுறை சூட்கேஸ் மற்றும் பேக் பேக்குடன் கட்டணம் செலுத்தாமல் பயணித்திருக்கிறேன், ஏனெனில் அவை அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் இருந்தன. இது மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருப்பதை பற்றியது" என்று ஒரு பயனர் பதிலளித்தார்.
 
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் விதிமுறைகளின்படி, ஸ்கேனர்களில் பொருந்தாத பெரிய பொருட்களுக்கு ரூ.30 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது,
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்