ரயிலில் அதிக லக்கேஜ் எடுத்து சென்றால் ஒன்றரை மடங்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

Siva

திங்கள், 14 ஏப்ரல் 2025 (10:09 IST)
சென்னையின் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து கோடை விடுமுறையை முன்னிட்டு, சென்னையிலிருந்து ஏராளமான பயணிகள் தங்களின் பிறந்த ஊர்களுக்கும், ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற பிரபல சுற்றுலா தலங்களுக்கும் கிளம்பி வருகின்றனர். இந்த சூழலில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக லக்கேஜ் எடுத்துச் செல்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 
 
இந்த நிலையில் அதிக லக்கேஜ் எடுத்து செல்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
 
ரயிலில் எவ்வளவு சுமையை எடுத்துச் செல்லலாம்?
 
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி,
 
ஏ.சி. முதல் வகுப்பு பெட்டியில்: 70 கிலோ வரை
 
ஏ.சி. இரண்டாம் வகுப்பு பெட்டியில்: 50 கிலோ வரை
 
ஏ.சி. மூன்றாம் வகுப்பு பெட்டியில்: 40 கிலோ வரை
 
முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதியுடன் பயணிக்கும் பயணிகள்: 40 கிலோ வரை
 
இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணிப்போர்: 35 கிலோ வரை
 
மேற்கண்ட வரம்புகளை மீறி 10 முதல் 15 கிலோ கூடுதல் எடையை எடுத்துச் செல்லும் பயணிகளிடமிருந்து ஒவ்வொரு கிலோவுக்கும் 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
 
இதேவேளை, பயணிகள் கொண்டு வரும் பொருட்களின் எடை மற்றும் அளவைக் கணக்கிட புதிய முறைகள் தொடர்பாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
 
பயணிகளின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், சுமைகளை கட்டுப்படுத்தி பயணத்தை சீராகச் செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் ரயில்வே அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
    
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்