இந்த மாற்றம் நேஷனல் காலேஜ், ஜெயநகர், பனசங்கரி, கபன் பார்க் உள்ளிட்ட முக்கிய நிலையங்களை உள்ளடக்கியது. மெட்ரோ கார்டு/டோக்கன் மூலம் அணுகும் கட்டண பகுதிக்குள் உள்ள கழிப்பறைகள் மட்டுமே பயணிகளுக்கு இலவசமாக இருக்கும் என BMRCL விளக்கம் அளித்துள்ளது.
இதேவேளை, பயணிகள் மற்றும் BMRCL ஊழியர் சங்கம் கடுமையாக விமர்சனம் தெரிவித்துள்ளனர். “நிர்வாகம் பெரும் தொகைகளை வீணாக்குகிறது. கழிப்பறைக்கு கட்டணம் விதிப்பதற்கு பதிலாக, உள்ள சிக்கல்களை தீர்க்க வேண்டும்” என துணைத் தலைவர் சூர்யநாராயண மூர்த்தி குற்றம்சாட்டினார்.