ஏ.. எப்புட்றா..? இந்த விமானத்துல பிசினஸ் க்ளாஸே கிடையாதே!? – பயணிக்கு நேர்ந்த குழப்பம்!

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2023 (14:00 IST)
பெங்களூருவை சேர்ந்த பயணி ஒருவர் விமானம் ஒன்றில் வணிக வகுப்பு இருக்கை புக் செய்த நிலையில் அந்த விமானத்தில் வணிக வகுப்பே இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஏர் விஸ்தாரா நிறுவனமும் பல்வேறு உள்நாட்டு சேவைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் ரோகித் வர்மா என்பவர் பெங்களூரிலிருந்து குவாஹத்தி செல்ல விமானத்தில் மேக் மை ட்ரிப் தளம் மூலமாக புக் செய்துள்ளார். அந்த ஏர் விஸ்தாரா விமானத்தில் வசதியான பிசினஸ் க்ளாஸ் இருக்கைகள் இருப்பதாக காட்டியதால் ரோகித் ரூ.1.65 லட்சத்திற்கு டிக்கெட் புக் செய்தததாக தெரிகிறது.

ALSO READ: 3 நாட்களில் ஏ.டி.எம். கொள்ளையர்கள் பிடிபடுவார்கள்ள் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் பேட்டி

பின்னர் அன்று விமானத்திற்கு சென்ற அவர் அதில் பிசினஸ் க்ளாஸ் இருக்கைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பிசினஸ் க்ளாஸ் இருக்கைக்கு புக் செய்துவிட்டு எக்கனாமிக் க்ளாஸில் சென்ற அவர் இதுகுறித்து ஏர் விஸ்தாரா நிறுவனத்திற்கும் புகார் அளித்துள்ளார்.

இந்த தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ததுடன், அந்த பயணிக்கு அவருடைய மொத்த டிக்கெட் தொகையும் திரும்ப அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்