மகேந்திர சிங் தோனியை கவுரவிக்க முதல்வர் கோரிக்கை… ஏற்குமா பிசிசிஐ!

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (21:39 IST)
இந்த சுதந்திரம் இந்தியர்களுக்கு மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியத தினம். ஏனெனில் இன்று தோனி ஒரு முக்கியமான முடிவை அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனால் அவரது ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர். இந்த சோகம் ஆறுவதற்குள் இந்திய கிர்க்கெட் அணியின் மற்றோரு வீரரும் சின்னத் தலை என்று அழைப்படுபவருமான சுரேஷ் ரெய்னா சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதனால் இவர்கள் இருவரும் கலந்து கொள்ளும் கடைசி ஐபிஎல் போட்டிகள் இதுவாகத்தான் இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில், ஜார்ஜண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், தோனியை கவுரவிக்கும் வகையில்  தோனிக்காக கடைசி போட்டியை ராஞ்சியில் நடத்த வேண்டும் என பிசிசிஐக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு வீரருக்காக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளதற்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்