கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வரானார் பசவராஜ் பொம்மை

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (11:50 IST)
சற்றுமுன் கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுக்கொண்டார். 

 
கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பதும் வயது மூப்பு காரணமாக ராஜினாமா செய்வதாக அவர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார் என்பது தெரிந்ததே. 
 
கர்நாடக மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருக்கும் பசவராஜ் பொம்மை புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலிடத்தின் அறிவிப்பின்படி இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து விலகினாலும், தனக்கு நெருக்கமான, தனது சமூகத்தைச் சேர்ந்தவரையே முதல்வராக்கியுள்ளார் எடியூரப்பா. 
 
இந்நிலையில் சற்றுமுன் கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுக்கொண்டார். ராஜ்பவனில் அவருக்கு ஆளுநர் தவார் சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மையின் மகன் தான் பசவராஜ் பொம்மை. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்