கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு!

செவ்வாய், 27 ஜூலை 2021 (20:36 IST)
கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு!
கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பதும் வயது மூப்பு காரணமாக ராஜினாமா செய்வதாக அவர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார் என்பது தெரிந்ததே 
 
இதனை அடுத்து கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்ற கேள்வி பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இடையே எழுந்த நிலையில் தற்போது அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது
 
கர்நாடக மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருக்கும் பசவராஜ் பொம்மை அவர்கள்தான் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலிடத்தின் அறிவிப்பின்படி இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து கர்நாடக மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை அவர்கள் நாளை பதவி ஏற்றுக் கொள்வார் என்றும் அவருக்கு கர்நாடக மாநில ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்றும் கூறப்படுகிறது. புதிய முதல்வராக தேர்வு பெற்றுள்ள பசவராஜ் பொம்மை அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்