பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட பல்வேறு அரசுப் வங்கிகள், தற்போது ஏடிஎம்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் வழக்கம்போல இயங்குகின்றன என உறுதிபட தெரிவித்துள்ளன.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பரபரப்பு சூழலைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் “ஏடிஎம்கள் விரைவில் மூடப்படும்” என்ற போலி தகவல்கள் பரவியதைத் தடுக்கும் வகையில், வங்கிகள் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது எக்ஸ் பக்கத்தில், “எங்கள் ஏடிஎம்கள், சிடிஎம்கள் மற்றும் அனைத்து டிஜிட்டல் சேவைகளும் இயல்பாக இயங்குகின்றன. வாடிக்கையாளர்கள் எந்தவித தடையுமின்றி பயன் பெறலாம்” என்று கூறியுள்ளது. மேலும், பொய்யான செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளது.