அடுத்த தாக்குதல் எப்போது? பிரதமருடன் முப்படை தளபதி, ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை..!

Mahendran

வெள்ளி, 9 மே 2025 (13:39 IST)
கடந்த சில வாரங்களாகவே இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பிரதமருடன் முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
நேற்று இரவு முதல் இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதை அடுத்து முப்படை தளபதிகள் இன்று பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.
 
இதனை அடுத்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களும் பிரதமரை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
 
இந்த ஆலோசனை கூட்டத்தில் பாகிஸ்தான் தாக்குதலை எப்படி சந்திப்பது, பாகிஸ்தானில் உள்ள மீதமுள்ள தீவிரவாத முகாம்களை எப்படி அழிப்பது, பாகிஸ்தானை ராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முடக்குவது எப்படி என்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக கூறப்பட்டது.
 
மொத்தத்தில் இந்த முறை தீவிரவாதத்தை முழுமையாக ஒழித்துக் கட்டுவது தான் இந்தியாவின் பணி என்ற நோக்கில் தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்