பெங்களூரில் கடும் போக்குவரத்து நெருக்கடி.. போக்குவரத்து பிரிவு ஏ.டி.ஜி.பி இடமாற்றம்.!

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (18:21 IST)
பெங்களூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து போக்குவரத்து பிரிவு ஏடிஜிபி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தொடர் விடுமுறை காரணமாக பெங்களூரில் இருந்து சென்னை உள்பட சொந்த ஊருக்கு செல்லும் நபர்கள் காரணமாக கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. 
போக்குவரத்தை சரி செய்யாத போக்குவரத்து பிரிவு ஏடிஜிபி அலோக் குமார் என்பவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பெங்களூர் நகரில் கடந்த பல ஆண்டுகளாக போக்குவரத்து நெருக்கடி பிரச்சனை இருந்து வரும் நிலையில் அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்