தொடர் விடுமுறையால் சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்..!

வியாழன், 28 செப்டம்பர் 2023 (07:52 IST)
நாளை முதல் ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை கிடைப்பதை அடுத்து சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்கள் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும்  பொதுமக்கள் பேருந்துகள் மற்றும்  ரயில்களில் சென்று வருகின்றனர். மிலாடி நபி காந்தி ஜெயந்தி  சனி ஞாயிறு என வரிசையாக விடுமுறை  கிடைத்துள்ளதை அடுத்து சிறப்பு பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்தே சென்னை புறநகரில் அதிக போக்குவரத்து நெரிசல் இருப்பதாகவும் குறிப்பாக பெருங்களத்தூர் பகுதியில் பேருந்துகள் ஊர்ந்து கொண்டு செல்வதாகவும் கூறப்படுகிறது. 
 
நேற்று இரவு 12 மணி முதல் இன்று அதிகாலை வரை போக்குவரத்து நெரிசல் இருந்ததாகவும் போக்குவரத்து போலீசார் நெரிசலை சரி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.  
 
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்