பாபா ராம்தேவ் யோகா நிகழ்ச்சி திடீர் ரத்து: காரணம் என்ன?

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (22:35 IST)
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி உள்பட அன்றைய தினம் முக்கிய பிரமுகர்கள் யோகா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுண்டு
 
இந்த நிலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாபா ராம்தேவ் ஒரு பிரமாண்டமான யோகா நிகழ்ச்சி ஒன்றை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவாரில் நடத்த திட்டமிட்டிருந்தார். இந்த இந்த யோகா விழா திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
பாபா ராம்தேவ் நடத்த திட்டமிட்டிருந்த இந்த யோகா விழாவில் அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொள்ளவிருந்தனர். இந்த விழாவில் பாபா ராம்தேவ் உடல் தூய்மை குறித்து விளக்கம் அளிக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில், இந்த யோகா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது ஏன் என்பது குறித்த காரணங்களை தெரிவிக்க பாபா ராம்தேவ் தரப்பினர் மறுத்துவிட்டனர். ஆனால் உத்தரகண்ட் மாநிலத்திற்கு பதிலாக இந்த நிகழ்ச்சி மகாராஷ்ட்ரா மாநிலத்திற்கு மாற்றப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்