தற்போது தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தொலையில் இருந்து பள்ளிக்கு வரவேண்டியதிருந்தால் பள்ளிக் கட்டணத்துடன் சேர்த்து பேருந்துக்கட்டணத்தையும் செலுத்திவருகிறார்கள். ஆனால் இதையே சாக்காக வைத்து பல பள்ளிகள் பெற்றோரிடமிருந்து அதிகளவில் பணத்தைக் கறந்து வருவதாக மக்கள் தமிழக அரசிடம் தெரிவித்தனர். மேலும் இதற்கு நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.