கர்நாடகாவில் 7 பேர்களுக்கு புதிய வகை வைரஸ்: அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் புதிய வகை ஏ.ஒய் 4.2 என்ற வைரஸ் பரவி வருவதாகவும் குறிப்பாக பெங்களூரில் ஏ.ஒய் 4.2 வைரஸ் 2 பேர்களுக்கு கண்டறியப்பட்டதாக இன்று காலை செய்திகள் வெளியானது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் 7 பேருக்கு ஏ.ஒய் 4.2 வைரஸ் பரவி இருப்பதாக சற்று முன் வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி தற்போதுதான் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த நிலையில் தற்போது ஏ.ஒய் 4.2என்ற புதிய வகை வைரஸ் ஒரு சில நாடுகளில் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த நிலையில் இந்தியாவிலும் ஏ.ஒய் 4.2வைரஸ் பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்த நிலையில் பெங்களூருவில் இரண்டு பேருக்கு ஏ.ஒய் 4.2 கண்டறியப்பட்டதாக தகவல் வெளியானது
இந்த நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் மட்டும் ஏழு பேருக்கு ஏ.ஒய் 4.2 என்ற வைரஸ் பரவி உள்ளதாகவும் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது