இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் நிலவி வரும் நிலையில் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் குறித்து யாரும் விமர்சிக்க வேண்டாம் என ஆந்திர துணை முதல்வர் பவண் கல்யாண் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் “பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் மீது ஒரு வலுவான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதை ஒவ்வொரு இந்தியரும் பெருமையாகக் கொள்ள வேண்டும். பஹல்காம் தாக்குதலில் ஆந்திராவை சேர்ந்த இருவர் இறந்துள்ளனர்.
இந்த நேரத்தில் நாம் கட்சி வேறுபாடுகளை மறந்து மத்திய அரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். சோசியல் மீடியாக்களில் சிந்தூர் ஆபரேஷன் குறித்து நாட்டிற்கு எதிரான கருத்துகளை தெரிவிக்காதீர்கள். செல்வாக்கு மிக்கவர்கள் வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது. எல்லை மீறினால் வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைக்கப்படுவார்கள்” என்று எச்சரித்துள்ளார்.
மேலும் “மியான்மரில் இருந்து போர் காரணமாக அகதிகளாக வந்த ரொஹிங்கியா முஸ்லீம்கள், இந்தியாவில் ஐதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களால் உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு பாதிப்புக்கு உள்ளாகிறது. ஐதராபாத்தில் உள்ள ரொஹிங்கியா முஸ்லீம்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாநில அரசு கண்காணிப்பை ஏற்படுத்த வேண்டும்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K