பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இது பழிவாங்கல் நடவடிக்கை என்றும், இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடத்த தான் முயல்வதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இறங்கிய இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் 9 முகாம்களை தாக்கி அழித்துள்ளது. இதில் 31 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் இந்த தாக்குதல் குறித்து பேசியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் “இந்த தாக்குதல் மோசமானது. இந்தியா, பாகிஸ்தானையும், அதன் தலைவர்களையும் எனக்கு நன்றாக தெரியும். போர் பதற்றத்தை இரு நாடுகளும் பேசி தீர்க்க வேண்டுமென விரும்புகிறேன். அதற்கு இரு நாடுகளுக்கும் இப்போது அவகாசம் உள்ளது. பழிக்குப்பழியாக இந்த தாக்குதல் நடந்துள்ளது. என்னால் இந்த சண்டையை தடுக்க ஏதாவது செய்ய முடியுமென்றால் கண்டிப்பாக அதை செய்ய தயாராக உள்ளேன்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K