பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிகின்றன.
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், “பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை கொண்டு வந்த ராணுவத்துக்கும், பிரதமருக்கும் ஆதரவு நிச்சயம்” எனத் தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், நேரிலேயே பிரதமருக்கும் ராணுவ அமைச்சருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், “மத்திய அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது” என்றார்.
அசாதுதின் ஒவைசி, “பாகிஸ்தான் மீது இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்க வேண்டும்” என கூறினார்.
சிவசேனாவும், பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரும், கேரள கவர்னரும், ராணுவத்தை பாராட்டினர்.
கம்யூனிஸ்ட் முதல்வர் பினராயி விஜயனும், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் ஆதரவு தெரிவித்தனர்.
உபி முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ், மாயாவதியும், இந்த நடவடிக்கையை வரவேற்றனர்.
மேலும் கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர், நடிகர் ரஜினிகாந்த், தவெக தலைவர் விஜய், இசையமைப்பாளர்கள் இளையராஜா, அனிருத், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பிரதமருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பஹல்காமில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரும், “பிரதமருக்கு தங்களுடைய நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.