மியான்மரில் உள்ள நாகா என்னும் பகுதில் தான் இந்த சோக நிகழ்வு அரங்கேறியது. பெயர் தெரியாத நோய் தாக்கி 30 குழந்தைகளுக்கு சுவாச பாதிப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்து உள்ளன.
உள்ளூர் நிர்வாகியான கே சாய், கடந்த ஜீன் மாதத்தில் இருந்து இந்த நோயின் தாக்கம் உள்ளதாகவும், நயுன் மற்றும் லஹே நகரங்களில் உயிரியப்பின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், இது 1,300 கி.மி தொலைவில் உள்ள நாட்டின் ஏழ்மையான நகரமாகும் என தெரிவித்துள்ளார்.
நோய்க்கான காரணத்தையும் அதன் தீர்வையும் கண்டு பிடிக்க இறந்தவர்களின் இரத்த மாதிரிகளை ஆய்விற்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பட்டுள்ளது.
இதில் மேலும் சோகத்தை ஏற்படுத்துவது சுகாதார அமைச்சகம் இன்னும் இதில் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காதது தான்.