பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் சேதமான தொகை முழுவதும் அரசியல் கட்சிகள் இடம் இருந்து வசூலிக்கப்படும் என அசாம் மாநில போலீஸ் அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு நேற்று சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் சில எதிர்க்கட்சிகள் சிஏஏ சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது
இந்த நிலையில் போராட்டத்தின் போது பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் அதற்கான தொகை சம்பந்தப்பட்ட கட்சிகளிலிருந்து முழுவதுமாக வசூலிக்கப்படும் என்று அசாம் மாநில காவல்துறை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது
அசாம் மாநிலத்தில் 16 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சிஏஏ சட்டத்திற்கு எதிராக முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில் போலீசாரின் இந்த நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது