மக்களவை தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட 10 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உத்தேச தேர்தல் தேதி, வாக்குச்சாவடி நடத்தை விதிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. மக்களவை தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளும் தங்களது கருத்துக்களை தெரிவித்தன.