வரியை ஒழுங்கா கட்டுங்க, அப்பதான் பெட்ரோல் விலையை குறைக்க முடியும்: அருண் ஜெட்லி

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (11:17 IST)
பொதுமக்கள் அனைவரும் நேர்மையாக வரி செலுத்தினால்தான், வரியின் வருமானத்திற்கு தக்கவாறு பெட்ரோலிய பொருட்களின் விலையை அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தனது முகநூலில் கூறியுள்ளார். 
 
இதுகுறித்து அமைச்சர் அருண்ஜெட்லி தனது முகநூலில் கூறியிருப்பதாவது: நாட்டு மக்கள் அனைவரும் நேர்மையாக வரி செலுத்தினால்தன் பெட்ரோலிய பொருட்களின் மீதான வரியை அவர்கள் சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்காது என்றும் ஆனால் குடிமக்கள் அனைத்து வகையினங்களுக்கும் வரியை செலுத்தாத நிலையில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கும் வாய்ப்பே இல்லை என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.  
 
மேலும் ப.சிதம்பரம் கூறிய குற்றச்சாட்டு ஒன்றுக்கு பதிலளித்த அருண்ஜெட்லி, 'பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் நாட்டின் ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2 சதவீதம் சரிந்துள்ளதாக கூறுவது தவறு என்றும், இந்தியா வறுமையில் வாழ்வதாக ப.சிதம்பரம் கூறுவது, ஒருவேளை அவரின் எதிர்காலத்தை கூறுகிறாரோ என்னவோ என்றும் கூறிய அமைச்சர் அருண்ஜெட்லி, உலக அளவில் மிக வேகமாக இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்