அமலாக்கத்துறை மட்டும் ஒன்று இல்லை என்றால் பாஜக என்ற கட்சியே இருக்காது என்றும் அந்த கட்சியில் உள்ள பலர் வெளியேறி இருப்பார்கள் என்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அமலாக்கதுறையை ஒழித்து, பண மோசடி தடுப்புச் சட்டத்தை ஒழித்தால் பாஜகவில் இருக்கும் பாதி அரசியல் தலைவர்கள் அந்த கட்சியில் இருந்து விலகிவிடுவார்கள் என்று தெரிவித்தார்
பாஜகவில் உள்ள பிரமுகர்களான சிவராஜ் சிங் சவுகான், வசுந்தரா ராஜே ஆகியோர் தங்களுக்கு என தனியாக ஒரு கட்சியை உருவாக்கி இருப்பார்கள் என்றும் அமலாக்கத்துறை தான் அவர்கள் பாஜகவில் இருப்பதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்
அமலாக்கத்துறையின் சம்மன் சட்டவிரோதம் என்பதால் தான் நான் ஆஜராகவில்லை என்றும் இனியும் ஆஜராக மாட்டேன் வேண்டும் அவர் உறுதிபட தெரிவித்தார்.