லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமின் மனுவுக்கு அரசுத்தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமின் மனு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி விவேக் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கித் திவாரிக்கு ஜாமின் வழங்க அரசுத்தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி அரசு டாக்டர் இடம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது