இந்தியாவில் ஐபோன் உற்பத்தி: 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (07:46 IST)
இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதனால் சுமார் 5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.
 
உலக அளவில் பிரபலமாகி வரும் ஐபோன்கள் தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஐபோன் உற்பத்தி 25 சதவீதம் அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
இந்தியாவில் இயங்கிவரும் பாக்ஸ்கான் உள்ளிட்ட நிறுவனங்களிடம் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரித்தால் புதிதாக ஐந்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்