பிரதமா் மோடிக்கு யாராலும் சவால் விட முடியாது: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (13:53 IST)
பிரதமர் மோடிக்கு யாராலும் சவால் விட முடியாது என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு சவால் விடுக்கும் வகையில் யாருமில்லை என்றும் அவருக்கு சவால் விடக்கூடிய தலைவர்கள் யாரும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
2024 ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையும் பட்சத்தில் எதிர்க்கட்சிகளில் தலைவர்கள் பலர் இருப்பதால் ஒரு பிரதமர் வேட்பாளரை அறிவித்து கடினமான ஒன்று என்றும் இத்தகைய சூழ்நிலையில் எதிர்க்கட்சிகளால் போது கொள்கையை வகுத்து பிரதமர் வேட்பாளரை ஒருமனதாக தேர்வு எழுத முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி என்று நாங்கள் அறிவித்து விட்டோம் என்றும் ஆனால் எதிர்க்கட்சிகளால் பிரதமர் வேட்பாளரை தேர்தல் வரை அறிவிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்