கேரள மாநிலத்தில் பரவும் ஆந்தராக்ஸ் ! சுகாதாரத்துறை எச்சரிக்கை

Webdunia
சனி, 2 ஜூலை 2022 (20:13 IST)
கேரள மாநிலத்தில் உள்ள வனப்பகுதிகளில் அதிகளவில் ஆந்தராக்ஸ்    நோய் பரவி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம்  அதிரப்பள்ளி என்ற வனப்பகுதியில் ஆந்தராக்ஸ் தொற்றுப் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

அங்குள்ள வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டுப்பன்றிகளை பரிசோதனை செய்ததில் அவற்றிற்கு ஆந்தராக்ஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே ஆந்தராக்ஸ் பரவும் இடங்களுக்குப் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்