ரயில்வே கிராஸிங்கில் விழுந்த பைக்! நொடி பொழுதில் நொறுக்கிய ரயில்! – பதற செய்யும் வீடியோ!

Webdunia
புதன், 27 ஜனவரி 2021 (17:33 IST)
ஆந்திர பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் ரயில் வழித்தடத்தில் நொடியில் உயிர்தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியா முழுவதும் பல வழித்தடங்களில் ரயில்கள் செயல்படும் நிலையில் ஆளரவமற்ற ரயில்வே தடங்களை வாகனங்கள் கடக்கும்போது விபத்துகள் ஏற்படுவது போன்ற சம்பவங்கள் தடுக்க முடியாதவை ஆகின்றன. இந்நிலையில் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடைபெற்ற ஒரு விபத்து காட்சி வைரலாகி வருகிறது.

ராஜமுந்திரி ரயில்வே நிலையம் அருகே உள்ள க்ராஸிங்கில் பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் எக்ஸ்பிரஸ் ரயில் வருவதால் தண்டவாளம் அருகே பைக்கில் காத்திருந்திருக்கிறார். அப்போது ஆக்ஸிலேட்டரை முடுக்கி விடவே பைக் தண்டவாளம் அருகே சென்று விழுந்தது. அதை எடுக்க சென்றவர் ரயில் வருவதை பார்த்து ஓடிவிட ஓரமாய் கிடந்த பைக் ரயிலில் சிக்கி சிதறியது. பைக்கை மீட்கும் முயற்சியை கைவிட்டதால் அந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்