ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற சிந்துக்கு, விஜயவாடாவில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் ஆந்திர மாநில முதலமைச்சர் சிந்துவுடன் மேடையில் விளையாடினார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் ஒற்றையர் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் விளையாடிய பி.வி.சிந்து வெள்ளி பதக்கம் வென்றார்.
அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் அவரை கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் ஆந்திரா மாநிலமும், தெலங்கானா மாநிலமும் அவரை சொந்தம் கொண்டாட போட்டிப்போட்டு கொண்டனர். அவரது சொந்த ஊரான ஐதராபாத்தில் அவருக்கு நேற்று பாராட்டு விழா நடைப்பெற்றது.
இந்நிலையில் விஜயவாடாவில் சிந்துவுக்கு இன்று பாராட்டு விழா நடைப்பெற்றது. இதில் மாநில முதல்வர் சந்திரபாபு கலந்து கொண்டார். விழா மேடையில் சந்திரபாபு சிந்துவுடன் பேட்மிண்டன் ஆடினார். இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.