பேரன் பிறந்த நாள் அன்று திருப்பதி கோவிலுக்கு முதல்வர் கொடுத்த நன்கொடை எவ்வளவு தெரியுமா?

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (06:35 IST)
ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாடுவின் பேரன் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் திருப்பதி திருமலா வெங்கடேஸ்வரா கோவிலுக்கு அவர் ரூ.26 லட்சம் நன்கொடையாக கொடுத்தார்

முதல்வராக தனது பிசியான பணியிலும் நேற்று சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினர்களுடன் திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலுக்கு வந்திருந்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

சந்திரபாபு நாடு, அவரது மனைவி மனைவி, மகன் நரலோகேஷ் அவரது மனைவி நரபிராமனி மற்றும் பேரன் நரதேவனேஷ் ஆகியோர்கள் கோவிலுக்கு வருகை தந்திருந்தனர். பேரன் நரதேவனேஷ் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்பின்னர் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பேரன் பிறந்தநாளை முன்னிட்டு கோவிலின் அறக்கட்டளைக்கு ரூ.26 லட்சம் நன்கொடை அளித்தார். இந்த நன்கொடை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்