லஞ்சம் அதிக அளவில் புழங்கும் மாநிலமாக கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, ஆந்திரா இரண்டாமிடத்தில் உள்ளது. இந்நிலையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இதற்கு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்தார்.
உதவி மையத்தில் புகார்கள் குவிய தொடங்கின. தற்போது, இந்த நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அதிகாரிகள் அனைவரும் யாரிடம் இருந்து லஞ்சமாக பணம் வாங்கினார்களோ, அவர்களின் வீடுதேடி சென்று வாங்கிய பணத்தை திருப்பி அளித்து வருகின்றனர்.
மேலும் புகார் அளிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. ஆனால், இந்த புகார்கள் எல்லாம் சுமார் 500, 1000 ரூபாய் லஞ்சம் தொடர்பாகவே உள்ளதாக தெரியவந்துள்ளது.